நாமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

Matale Namal Rajapaksa
By Dharu Dec 17, 2025 01:23 PM GMT
Report

மாத்தளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், இளைஞர் ஒருவர் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் சத்தமிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அந்த பகுதியில் பாதுகாப்பான காணிகளை அடையாளம் காண்பதில் முறைகேடுகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். "தினேஷ் அய்யா" எனப்படும் ஒரு நபர் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நல்ல காணிகளை தேர்வு செய்து தருவதாகவும், தங்களுக்கு வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கூறி அவர் பாரபட்சம் காட்டுவதாகவும் அந்த இளைஞர் ஆவேசமாகக் கூறினார்.

டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால்

டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால்

வாக்குவாதம் முற்றிய நிலை

வாக்குவாதம் முற்றிய நிலையில், நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்த நாமல் ராஜபக்ச அந்த இளைஞரைத் தனியாக அழைத்து அவரிடம் அமைதியாகப் பேசினார்.

நாமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் | Young Man Got Into An Argument With Namal

"உங்களது அரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், எனது அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த மக்களை மாதக்கணக்கில் முகாம்களில் வைத்திருக்க முடியாது. முதலில் அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தேட வேண்டும்," என்று நாமல் அந்த இளைஞரிடம் கூறினார்.

மேலும், அரசாங்கம் அல்லது ஜனாதிபதி மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் பேசலாம் என்றும், இது மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் வாதிடுவதற்கான இடமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாமலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், பின்னர் தனது ஆவேசத்தைக் குறைத்துக் கொண்டார்.

நாமலின் கருத்துக்களுக்கு இணங்கிய அவர், இறுதியில் நாமல் ராஜபக்சவைக் கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் பதற்றமாக இருந்த அந்த இடம், ஒரு சுமுகமான சூழலுடன் முடிவுக்கு வந்தது.

தையிட்டி திஸ்ஸ விகாரை தேரருக்கு அதிகாரம் - ஓரணியில் அரசும் - எதிர்க்கட்சியும்

தையிட்டி திஸ்ஸ விகாரை தேரருக்கு அதிகாரம் - ஓரணியில் அரசும் - எதிர்க்கட்சியும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025