அரச நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டமூலம்
அரச நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிணக்குகளை துரிதமாக தீர்ப்பதற்கு ஏற்றவாறு இந்த சட்ட நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிணக்குகளை கணிசமான அளவு குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை
அதன்படி, இந்த சட்ட நடவடிக்கைகளை சட்டமூலமாக தயாரிக்க சட்டமா அதிபரிடம் வினவி சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் யோசனையொன்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான அரச ஊழியர்கள்
இந்த முன்மொழிவிற்கே அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளதால் விரைவில் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் அதிகளவான அரச ஊழியர்கள் பணியில் உள்ளதால், அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |