மகிந்தவின் காலத்திலிருந்த மற்றுமொரு முக்கிய தரப்புக்கு வருகிறது பேரிடி!
மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்த சில அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்ந காலப்பகுதியில் இருந்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் ராஜபக்சர்களின் அரசியல் மற்றும் வணிக நலன்களுக்காக செயல்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நிர்வாகத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள், சில தொழிலதிபர்களை செல்வாக்கு செலுத்தவும், அவர்களின் தொழில்களைக் கைப்பற்றவும் பயன்படுத்தப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேற்றம்
இந்த நிலையில், தற்போதுள்ள சூழ்நிலைகள் காரணமாக சில தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, சில தொழிலதிபர்கள் தங்கள் சொத்துக்களை ராஜபக்ச ஆதரவாளர்களிடம் கொள்ளை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக ஒப்படைத்துள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |