அரச ஊழியர்களுக்கு பேரிடி: வேலையை இழக்கும் அபாயத்தில் 24000 பேர்
Government Employee
Sri Lanka
Ceylon Electricity Board
By pavan
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
24,000 ஊழியர்களின் நிலை
இதன் காரணமாக மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த 24,000 ஊழியர்களையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : வோல்கர் டர்க்
YOU MAY LIKE THIS
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்