அரச சேவைகளில் அநுர அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் மாற்றம்
இலங்கையில் தற்போது வினைத்திறனற்ற அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையாய பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நேற்று (20) ஹோமாகமவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் துறையில் அதிக அனுபவமுள்ள, தற்போது டிஜிட்டல் மயமாக்கலில் வெளிநாட்டில் முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், தனது அரசால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டத்திற்கு ஆதரவளிக்க தானாக முன்வந்து இலங்கை வரவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசின் முக்கிய பணி
அத்தோடு, இன்னும் ஓரிரு வாரங்களில் தனது பணியை அவர் தொடங்கிவிடுவார் என்றும், புதிய டிஜிட்டல் மயமாக்கலுக்கான அமைச்சகத்தை உருவாக்கி வருகிறதாகவும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதாகவும், தேசிய மக்கள் சக்தி அரசின் மிக முக்கியமான பணியாக இதை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |