உள்ளே இருந்து கொண்டு கூச்சலிடமால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுங்கள்! அரச பங்காளி கட்சிகளுக்கு அறிவுரை
அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல், அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை வெளியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தப்படாமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய முதலாவது நபர் நான் ஆவேன். 40 வருடங்களுக்கும் அதிக அரசியல் அனுபவத்தின் ஊடாகவே நான் அதைக் கூறினேன்.
அரசாங்கம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அதனை எதிர்க்கும் அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல், அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
குறைந்தபட்சம் பிரதேசசபை உறுப்பினராகக் கூட சேவையாற்றிய அனுபவம் கூட அற்ற அவரால் எவ்வாறு நாட்டை முறையாக நிர்வகிக்க முடியும்? அன்று என்னை தூற்றிய மக்கள் இன்று நான் கூறியது சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.