பிழையாக செயற்பட்டாரா வடக்கு ஆளுநர்..!
நியதிச் சட்ட உருவாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு ஆளுநர் - விக்னேஸ்வரன் சந்திப்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இக் கலந்துரையாடலின் போது பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் அண்மையில் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டம் சட்டத்துக்கு விரோதமானது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நேரடியாக குறிப்பிட்டிருக்க வேண்டும். நீங்கள் பிழையாக செயற்பட்டு விட்டீர்கள் என கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை” - என்றார்.
