வவுனியா மாநகர சபை மேயரை பதவியிலிருந்து நீக்கினார் ஆளுநர் : வெளியாகியது வர்த்தமானி

Vavuniya Sri Lanka Government Gazette Nagalingam Vedanayagam
By Independent Writer Jun 24, 2026 03:22 PM GMT
Report
Courtesy: gokul

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அரச அச்சக திணைக்களத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்கப்படுகிறார் என வர்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வர்த்தமானி அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1947ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் இணைந்து வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களின்படி பதவி நீக்கம்

வடக்கு மாகாண ஆளுநரான நாகலிங்கம் வேதநாயகன், மேற்கூறிய சட்டங்களின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், தனிநபர் விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, அதனைப் பரிசீலித்ததன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். இதற்காக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.கந்தையா அரியநாயகம் அவர்களை ஆணையாளராக நியமித்து, வவுனியா மாநகரசபை தொடர்பான நடவடிக்கைகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 277(1ஏ) பிரிவின் கீழ் பணித்திருந்தேன்.

வவுனியா மாநகர சபை மேயரை பதவியிலிருந்து நீக்கினார் ஆளுநர் : வெளியாகியது வர்த்தமானி | Governor Removes Vavuniya Municipal Council Mayor

அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 576) பிரிவு 277(1) இன் (ஏ) மற்றும் (டீ) உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் படி மேயராகத் தொடரத் தகுதியற்றவர் என நான் திருப்தியடைந்துள்ளேன்.

எனவே, 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277(1) பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுந்தரலிங்கம் காண்டீபன் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் புளொட் அமைப்பின் ஊடாக போட்டியிட்ட சு.காண்டீபன் வெற்றி பெற்று தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றி இருந்ததுடன், எதிரணியில் 10 உறுப்பினர்கள் இருந்தனர்.

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம்

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம்

வவுனியா மாநகரசபை

வவுனியா மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் பிழையாக இடம்பெற்றதாகவும் அப் பதவிகளை வறிதாக்கி மீள தெரிவை மேற்கொள்ளுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்களான சு.பிறேமதாஸ், விஜயகுமார் ஆகிய இருவரால் தொடரப்பட்ட வழக்கிற்கு அமைய கடந்த 8 மாதங்களாக செயற்படாது இருந்தது.

வவுனியா மாநகர சபை மேயரை பதவியிலிருந்து நீக்கினார் ஆளுநர் : வெளியாகியது வர்த்தமானி | Governor Removes Vavuniya Municipal Council Mayor

இம் மாதம் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பை அடுத்து பிரதி மேயர் தவிர்ந்து மேயரின் கீழ் சபை இயங்கி வந்த நிலையில் குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றமும் யூலை மாத முற்பகுதியில் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024