கிழக்கில் தொடரும் ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டை: ஆளுநர் அளித்த பதில்
சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை அழித்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி காணிகளை வெளிநாட்டுக்கு விற்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இனவெறியன் செந்தில் தொண்டமானுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் என்ற தலைப்பில் ஒரு இலட்சம் கையொப்பம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (19) திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.
கோகண்ணபுர காக்கும் அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டமானது இன்று காலை தொடக்கம் மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
ஆளுநரின் கருத்து
திருகோணமலை மணிக்கூண்டு கோபுரம், அபயபுர வட்டம், 4ம் கட்டை சந்தி ஆகிய பகுதிகளில் குறித்த நடவடிக்கையானது ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பரவலானவர்கள் இதில் கையெழுத்திடுவதற்கு வருகை தந்திருந்ததை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இவ்விடயம் தொடர்பாக ஆளுநரிடம் ஊடகவியலாளரொருவர் கேட்ட போது இது ஒரு ஜனநாயக நாடு யாரினாலும் என்ன மாதிரியான போராட்டங்களும் செய்யலாம்.
போராட்டங்கள் ஜனநாயக முறையில் நாட்டின்
சட்டங்களுக்கு ஏற்ற விதத்தில் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.