காத்தான்குடியில் பேரீச்சம்பழ அறுவடை - கிழக்கு ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு
Senthil Thondaman
By Vanan
பேரீச்சம்பழ அறுவடை
காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து கௌரவ ஆளுநர் பெற்றுக் கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
பள்ளிவாசல் விஜயம்
இதேவேளை, காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று தரிசத்துள்ளார்.
இதன்போது தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய குர்ஆன் பிரதி பள்ளிவாசல் கதீபினால் வழங்கி வைங்கப்பட்டது.