பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ஆளுநர் சுட்டுக்கொலை
Shooting
Philippines
Death
By Sumithiran
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் ஆளுநராக 2011-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ரோயல் டெகாமோ.
மக்களின் குறைகளை நேரில் கேட்டபோது சம்பவம்
இவர் நேற்று தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு இராணுவ உடையில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்திறங்கி தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஆளுநர் ரோயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். பொது நிகழ்ச்சியின்போது ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி