புதிதாக 4200 பேருக்கு அரச நியமனம் வழங்க நடவடிக்கை

Sri Lanka North Western Province Education
By Raghav Jun 11, 2024 07:47 PM GMT
Report

வடமேல் மாகாணத்தின் (North Western Province) கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் (Ahamed Nazeer Zainulabdeen) தெரிவித்தார்.

குருநாகல் (Kurunegala ) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் (Samanpriya Herath) ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள், காணி, வீடமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் துரிதகதியில் தீர்வுகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை நிராகரிக்கும் ஜே.வி.பி! உறுதிப்படுத்திய அனுரகுமார

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை நிராகரிக்கும் ஜே.வி.பி! உறுதிப்படுத்திய அனுரகுமார

அரசியல் சார்பு நிலைப்பாடு

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர் , அரசியல் வேறுபாடுகள் மற்றும் அரசியல் சார்பு நிலைப்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

புதிதாக 4200 பேருக்கு அரச நியமனம் வழங்க நடவடிக்கை | Governors Move To Appoint 4200 New Teachers

அத்துடன், பொதுமக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு அதிகாரியும், எந்தநேரத்திலும் அதுதொடர்பில் தன்னைச் சந்திக்க வர முடியும் என்றும், அவ்வாறான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

மாகாணத்தில் வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மட்டுமன்றி, சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களின்போதும், குறித்த நியமனங்களைப்பெறுவோர் சிக்கல்கள் இன்றி சேவையாற்றுவதற்கான வகையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையாது: இடித்துரைத்த சுமந்திரன்

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையாது: இடித்துரைத்த சுமந்திரன்

காசநோய் பரவும் அபாயம் 

இலங்கையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ள குருநாகல் மாவட்டம் என்பது மிக எளிதான முறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெறக் கூடிய இடமாக அமைந்துள்ளது.

புதிதாக 4200 பேருக்கு அரச நியமனம் வழங்க நடவடிக்கை | Governors Move To Appoint 4200 New Teachers

குருநாகல் மாவட்டத்தை மாத்திரமன்றி, புத்தளம் (Puttalam) உள்ளிட்ட ஒட்டுமொத்த வடமேல் மாகாணத்திலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் புதிய பொழுதுபோக்கு அம்சங்கள், புதிய பூங்காக்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

குருநாகல் மாவட்டத்தில் காசநோய் பரவும் அபாயம் குறித்தும் அதிக கவனத்தை செலுத்தியுள்ளேன்.

காசநோயின் அபாயம் குறித்தும், அதன் பரவலைத்தடுப்பது குறித்தும் மாகாணம் முழுவதும் ஒரே நாளில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன் என்றார்.

புதிதாக 4200 பேருக்கு அரச நியமனம் வழங்க நடவடிக்கை | Governors Move To Appoint 4200 New Teachers

குறித்த நிகழ்விற்கு, இராஜாங்க அமைச்சர்களாக சாந்த பண்டார (Shantha Bandara), டீ.பி.ஹேரத் (D. B. Herath), நாடாளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன (Asanka Navarathne ), மஞ்சுளா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர் ஏக்கநாயக்க உட்பட அரச உயர் அதிகாரிகள், குருநாகல் பிரதிப் காவல்துறை மா அதிபர் சுஜித் வெதமுல்ல உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ஏமனில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு: 49 பேர் பரிதாபகரமாக பலி!

ஏமனில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு: 49 பேர் பரிதாபகரமாக பலி!

ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த

ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021