அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
Government Employee
Sri Lankan Peoples
Anil Jayantha Fernando
By Dilakshan
அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayanta) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (24) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் வேண்டுமென்றால், இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று கூறியிருக்கலாம்.
வரவு செலவுத் திட்டம்
2026 இல் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வோம் என்றும் கருத்து வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அந்த விவரங்களை வரவு செலவு திட்டத்தில் தாக்கல் செய்வேன்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி