டித்வா புயலால் அழிக்கப்பட்ட வீடுகளை கட்டியெழுப்ப நில நன்கொடைகளை எதிர்பார்க்கும் அரசாங்கம்
‘டித்வா’ புயலால் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை கட்டியெழுப்ப நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மறுகட்டமைப்பு முயற்சியை ஆதரிக்க நிலத்தை நன்கொடையாக வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதையும் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு அரசாங்கம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள்
ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள் www.rebuildingsrilanka.gov.lk இல் மேலதிக தகவல்களைக் காணலாம்,அத்துடன் 1800 என்ற ஹொட்லைனை அழைக்கலாம் அல்லது 011 233 1246 என்ற தொலைநகல் மூலம் நில விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட எந்தவொரு குடிமகனும் பின்தங்கியிருக்காமல் பார்த்துக் கொள்வதும், சூறாவளிக்கு முந்தைய காலத்தை விட உயர்ந்த தரத்திற்கு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் இதன் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட எந்தவொரு குடிமகனும் பின்தங்கியிருக்காமல் பார்த்துக் கொள்வதும், வாழ்க்கையை உயர் தரத்திற்கு மீட்டெடுப்பதும் அரசாங்கத்தின் குறிக்கோள்.
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தை ஆதரிக்க அனைத்து பரோபகார முயற்சிகளும் வரவேற்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |