சாரதியின் துணிச்சலான முடிவால் காப்பற்றப்பட்ட 80 பயணிகளின் உயிர்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (26) அதிகாலை பயணித்த அரச பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
தலவாக்கலையில் இருந்து 5.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த குறித்த பேருந்து கடவல பகுதியில் உள்ள மஹா வாங்குவா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பிரேக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதன்போது சாரதியின் செயற்பாட்டால் பள்ளத்தை நோக்கி சென்ற பேருந்தானது விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
சாரதியின் செயல்
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

“பேருந்து ஒரு வளைவான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம், ஓட்டுநர் பேருந்தின் வேகத்தை குறைக்க இரண்டாவது கியருக்கு மாற்றியுள்ளார்.
அந்த நொடியில், பேருந்தின் பிரேக்கிங் அமைப்பு முற்றாக செயலிழந்துள்ளது. இந்த நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருந்தால் பாரிய பள்ளத்தில் விழும் அபாயம் இருந்ததாகவும் அது பெரும் உயிரிழப்பாக மாறியிருக்கக்கூடிய சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அபாய தருணத்தில், மகேஷ் சுதர்சன் என்ற சாரதி (49) எந்த தயக்கமும் இன்றி நொடிகளில் முடிவு எடுத்து பேருந்தை சாலையோரத்தில் உள்ள சாய்வான மண் மேடு செலுத்தி பேருந்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளார்.
இந்த துணிச்சலான முடிவே, பேருந்தில் பயணித்த சுமார் 80 பயணிகளின் உயிர்களை காப்பாற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.
80 பயணிகள்
80 பயணிகள் ஒருவருக்கு கூட காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஓட்டுநரும் நடத்துனரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் வேறொரு பேருந்தில் அவர்களை பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்துள்ளனர்.
இ சம்பவம் தொடர்பில், கினிகத்தேன காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில், கினிகத்தேன காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் போது, பேருந்தின் பிரேக் அமைப்பின் தொழில்நுட்ப நிலை பராமரிப்பு குறைபாடுகள் இருந்தனவா? இயந்திரக் கோளாறு காரணமா? என்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

