இந்தியா, சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்: அரசாங்கம் திட்டம்
இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதுடன், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான வர்த்தக நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |