விவசாயிகளுக்கு இலவச உரம் - அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
Ministry of Agriculture
By Vanan
எட்டு மாவட்ட விவசாயிகளுக்கு யூரியா உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகலை, பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு சிறுபோக பருவத்திற்காக தலா ஒரு யூரியா உர மூட்டை வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலவசமாக வழங்க தீர்மானம்
இதற்கிடையில், 36,000 மெட்ரிக் தொன் டிஎஸ்பி (TSP) உரத்தை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பல் மார்ச் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிஎஸ்பி (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்