அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான விசாரணை
அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சமீபத்தில் உரையாற்றினார் எனக் கூறப்படும் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பாகப் காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 13 மணி நேரம் முன்