மூடப்பட்ட பெரும் தொழிற்சாலை: காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்
கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் ஆடை தொழிற்சாலை நூறு மில்லியன் டொலர் இழப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக பதில் தொழிலாளர் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது பதில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாளர் திணைக்களத்தினால் தொழிற்சாலை மூடப்பட்டது, வணிகத் தேவைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1900 ஊழியர்களுக்கு வேலை
இதன்படி, வேலை இழந்த ஊழியர்களுக்கு கட்டுநாயக்கவைச் சுற்றியுள்ள பிற நிறுவனங்களில் வேலை வழங்க தொடர்புடைய தொழிற்சாலை தலையிடுவதாகவும் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
1416 ஊழியர்கள் வேலை இழந்த நிலையில், மற்ற நிறுவனங்களில் 1900 ஊழியர்களுக்கு வேலை வழங்க தொழிற்சாலை தலையிடுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் தரப்புடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலீடுகளில் தாக்கம்
அத்துடன், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் தலையிடுவதாகக் கூறிய மகிந்த ஜெயசிங்க, தொழிலாளர் சட்டத்தின் கீழ் இழப்பீட்டை விட அதிக இழப்பீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறுவனத்தை மூடுவதற்கான முடிவு இந்த நாட்டில் முதலீடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
