அரச அதிகாரிகளின் சம்பள பிரச்சினை: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இது தொடர்பாக ஆராய ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது
ஜனாதிபதி குழு
எனினும், அந்த குழுவினர் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரிக்குள் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு கூறியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |