இந்திய - இலங்கை ஒப்பந்தங்களால் அநுர அரசுக்கு அழுத்தம்: தமிழ் எம்.பி அதிரடி!
இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது, இந்தியாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், அதனால் முழு நாடும் அவற்றைப் பற்றி அறியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
அத்தோடு, இவ்வாறு செய்வதன் மூலம், முழு நாட்டையும் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்ல முடியும் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் உள்ள சில கட்சிகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்து நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக அமைச்சர் விஜிதவை குற்றஞ்சாட்டுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி ஒருபோதும் அத்தகைய கூற்றுக்களை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜிதவின் அறிவிப்பு
அத்துடன், கடந்த காலங்களில் இந்தியாவுடன் அதே ஒப்பந்தங்களைச் செய்ய முயற்சித்தபோது, நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டியது உங்கள் கட்சிதான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்துரையாடிய பிறகு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பான பதிலை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
