புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு - யாழில் சாதனை படைத்த பாடசாலை
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் (Uduvil Girls College) 61 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்து சாதனை படைத்ததுள்ளனர்.
உடுவில் மகளிர் கல்லூரியில் 160 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 61மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
அத்துடன் 81மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும், 18மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100 வீத சித்தியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
100 வீத சித்தி
உடுவில் மகளிர் கல்லூரி 100% சித்தியினை அடைந்துள்ளதுடன் தொடர்ந்து வலிகாம வலயத்தில் முதல்நிலை பாடசாலையாக மிளிர்ந்து வருகின்றது.
குறித்த பாடசாலையானது இவ்வாறு சாதனை புரிவதற்கு வழிவகுத்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்றும் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
25 ஆண்டுகளின் பின் சாதனை
இதேவேளை, யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலை 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும் அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |