பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த சிலருக்காக வழங்கப்படும் சிறப்பு விசா!
United Kingdom
Student Visa
World
By Beulah
பிரித்தானியா அரசானது பட்டப்படிப்பினை முடித்த பட்டதாரிகளுக்கென விசேட வேலைத்திட்டமொன்றினை அறிமுகம் செய்துள்ளது.
பிரித்தானிய பட்டதாரி புலம்பெயர்தல் பாதை என்னும் இந்த திட்டம், 2012இல் கைவிடப்பட்ட நிலையில், 2021இல் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த சிலருக்காக என ஒரு சிறப்பு விசா வழங்கப்படுகிறது. அது பட்டதாரி விசா என அழைக்கப்படுகிறது.
பட்டதாரி விசா குறித்த சில தகவல்கள்
இந்த திட்டத்துக்கு, பிரித்தானியாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இந்த பட்டதாரி விசா, சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தபின், இரண்டு ஆண்டுகள் பிரித்தானியாவிலேயே தங்கவும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மூன்று ஆண்டு காலம் பிரித்தானியாவில் தங்கவும் அனுமதிக்கிறது.
- இந்த பட்டதாரி விசா காலாவதியாகும் நேரத்தில், விசா வைத்திருக்கும் நபர், சூழ்நிலையைப் பொருத்து, திறன்மிகுப் பணியாளர் விசா போன்ற வேறொரு விசாவுக்கு மாறிக்கொள்ளலாம்.
- ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்கள் அரசு உதவி எதற்கும் விண்ணப்பிக்க அனுமதியில்லை.
- பட்டதாரி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், பொதுவாக 700 பவுண்டுகள். சிலர், உப கட்டணம் ஒன்று செலுத்த நேரலாம்.
இந்த திட்டத்தைக் கெடுக்க முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா முயற்சித்ததும், அவரது திட்டத்தை, கல்விக்கான மாகாணச் செயலரான Gillian Keegan முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி