மறுக்கப்படும் நிரந்தர நியமனம்! 04 நாளுக்கு நகரும் உண்ணாவிரத போராட்டம்
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த 6 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிகின்ற பட்டதாரிகளது நிரந்தர நியமனம் மறுக்கப்பட்ட வருகின்ற நிலையில், அகில இலங்கைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் அனிரன் உட்பட மூவர் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் அனிரன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் கடந்த ஆறு வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். அபிவிருத்தி உத்தியோகத்தராக நாங்கள் நியமனம் பெற்றாலும் வலயக்கல்வி அலுவலகர்களால் குறித்த பாடங்களைப் கற்பிப்பதற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்டு கடந்த அரசாங்கங்களால் நிரந்த ஆசிரியர் நியமனம் தருவதாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.
கண்டு கொள்ளாத அரசாங்கம்
இது தொடர்பாக நீதி மன்றில் வழக்குத் தொடுத்துள்ளதுடன், பலதரப்பட்ட போராட்டங்களையும் நாங்கள் செய்துவந்த நிலையில் எங்களுக்குச் சாதகமான பதில் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

எங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் 03 நாளைக் கடந்து 04 நாளுக்கு நகர்கிறது. இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை இந்த தேசிய மக்கள் சக்தி ( NPP ) அரசாங்கம் கணக்கில் கூட எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
அரசாங்கத்திற்கு அழுத்தம்
நாட்டில் மாற்றம் தேவை என வடகிழக்கில் உள்ள கணிசமான தமிழ் மக்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்து அதிகாரத்தை வழங்கிய போதும் வடகிழக்குத் தமிழர்களை இவர்கள் மதிப்பதாகத் தெரியவில்லை.

மட்டக்களப்பில் இருந்து நான் அணிரன் மற்றும் எனது சக ஊழியர் குகதாசன் ஆகியோர் உயிரிழக்கும் சூழலில் உண்ணாவிரதம் இருக்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா இந்த அரசாங்கம் எம்மை புறக்கணிக்கிறது. எனத் தெரியவில்லை.
இந்த எங்களது தொழில் உரிமைப் போராட்டதிற்கு ஆதரவு தரும்படி இருகரம்கூப்பி எமது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். எமது போராட்டம் வெற்றியடைய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உதவுவீரக்ள் என்பது எனது நம்பிக்கை.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |