யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள், வைத்தியசாலையில் தற்போது வழங்கப்படும் சிகிச்சை உட்பட அனைத்து சேவைகளையும் மேலும் மேம்படுத்த பணியாளர்களின் தேவை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை தொடர்பாக சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நடத்திய மதிப்பாய்வின் படி, அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் குழு, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கே தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது.
தேசிய வைத்தியசாலை கோரிக்கை
அதன்போது, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் யாழ்.போதனா வைத்தியசாலையை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்ற எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும், ஊழியர்களை மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒரு உள்ளக கணக்காய்வாளரை நியமிக்கவும், வைத்தியசாலைக்கு நிர்வாகம் உட்பட வைத்தியசாலையின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்கவும் அதன் நிர்வாக அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |