யாழில் நடைபெறவுள்ள மார்கழி இசை விழாவும் நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும்!

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Dec 25, 2023 11:06 AM GMT
Report

மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27, 28, 29 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த தினங்களில் மாலை 4.45 முதல் இரவு 9.15வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகக் கண்காட்சியானது புதன்கிழமை(27) காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு(படங்கள்)

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு(படங்கள்)

மாபெரும் மார்கழி இசை விழா

மேற்படி இசைவிழாவும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் இந்தியத்துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து யாழ் மத்திய கலாசார மண்டபத்தில் நடத்தவுள்ளன.

margazhi isai vila

இந்நிகழ்வில் புகழ் பூத்த இலங்கைக் கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.

மேலும் தவில் நாதஸ்வர இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி, நாதசங்கமம், விரலிசை கானம், நாட்டிய நாடகம், மற்றும் இந்தியக் கலைஞர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

பிரான்ஸில் 3 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்

பிரான்ஸில் 3 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்

 உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி

அதே வேளை மண்டபத்தின் வெளிப்புறத்திடலில் காலை 9 மணிமுதல் இரவு 9.30 வரை சுமார் 140 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறிய நடுத்தர உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும், மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

jaffna excibition

இது வடமாகாணத்தினைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் மாபெரும் கண்காட்சியாக அமையவுள்ளது. இந்த இருநிகழ்வுகளுக்கான பிரவேசம் இலவசமானது.

ஆகவே வடமாகாண மக்களின் கலை கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் இசைநிகழ்விலும், மற்றும் வடமாகாண உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற இருக்கும் வர்த்தகக் கண்காட்சிக்கும் பொதுமக்களாகிய தங்களனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்