சூழ்ச்சியை வெளியில் கொண்டுவர வேண்டும்! முறைப்பாடளித்த சிரந்த அமரசிங்க
கொழும்பு பொரள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சதித்திட்டம் குறித்து காவல்துறையின் தலைமையகத்தில் சமூக செயற்பாட்டாளரான சிரந்த அமரசிங்க நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
இதன் பின்னணியில் மிகப் பெரிய நாடகம் இருப்பது தெரிகிறது. இந்த நாடகம் பெல்லன்வில கைக்குண்டு சம்பவத்திற்கும் தேவாலய கைக்குண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாட்டில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் பொருட்கள் தயாராக இருக்கின்றது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வந்து கூறியதுடன் இந்த சூழ்ச்சி ஆரம்பமானது.
இதற்கு மறுநாளே நாராஹென்பிட்டி வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்படுகிறது. இதன் பின்னர் சரியாக ஒரு மாதத்தில் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி பெல்லன்விலவில் கைக்குண்டு மீட்கப்படுகிறது.
பொரள்ள கைக்குண்டு சம்பவம் தொடர்பாக முதலில் சன் கிறிஸ்டியன் கைது செய்யப்பட்டார். மருத்துவர் இதனை செய்திருந்தால், ஏன் சன் கிறிஸ்டியனை தடுத்து வைத்திருக்க வேண்டும்? சரத் வீரசேகர என்ன செய்ய முயற்சிக்கின்றார்.
நாட்டில் கத்தோலிக்க மற்றும் பௌத்த மக்கள் இடையில் பிளவுகளை ஏற்படுத்த சூழ்ச்சிகரமாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி , அதனை அரசியலுக்கு பயன்படுத்தி, வாக்குகளை உறுதிப்படுத்தும் அரசியல் விளையாட்டு நடக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்