யாழ் - திருநெல்வேலியில் கைக்குண்டு மீட்பு
Jaffna
Grenade
recovery
By Vanan
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்ட முற்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடிப் படையின் உதவியுடன் அக்குண்டு மீட்கப்பட்டது.
அப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்