சீனாவிற்கு படையெடுக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கை மற்றும் சீன நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஜூன் 24 முதல் 30 வரை சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீனத் தூதரகம், 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை - சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனத் தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
12 Members of the Parliaments from the Sri Lanka - China Parliamentary Friendship Association will visit Beijing, Ningbo, Shenzhen and Guangzhou from June 24 to 30 at the invitation of the Chinese side.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 21, 2023
The MPs from both government and opposition are planning to meet senior… pic.twitter.com/tH3c2Ay242
சீனாவின் அழைப்பின் பேரில் அவர்கள் ஜூன் 24 முதல் 30 வரை பெய்ஜிங், நிங்போ, ஷென்சென் மற்றும் குவாங்சோவுக்குச் செல்லவுள்ளனர்.
“சீன தேசிய மக்கள் காங்கிரஸ், வெளியுறவு அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை மற்றும் மாநகரசபை மேயர்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளை சந்திக்க அரசு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்,” என்று சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கள ஆய்வுகள்
ரயில்வே, துறைமுகங்கள், மின்சார வாகனங்கள், தகவல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
