வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்
வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அவர்களுக்கு முடி உதிர்வது அதிகரித்துள்ளதால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனால் அவர்களின் தலை விரைவாகவே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
முடி உதிர்தல் தொற்றுநோய்
நியுயோர்க் போஸ்ட் அறிக்கையின்படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக பரவுகிறது என்று தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் என்று நிபுணர்கள் குற்றம் சாட்டினர்.
வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விரைவான முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இராணுவம் தொடர்பாக கடுமையான விதிமுறை
மேலும் வடகொரியாவில் இராணுவம் தொடர்பாக கடுமையான விதிமுறை உள்ளது. அனைத்து உடல் திறன் கொண்ட ஆண்களும் பொதுவாக ஆயுதப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
பெரும்பாலான ஆண்கள் இராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது.
தற்போது வடகொரியாவில் மட்டுமின்றி தென்கொரியாவிலும் திடீரென முடி உதிர்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |