சுதந்திர தினம் கரிநாள் - தமிழர் எழுச்சிப் பேரணிக்கு பெருகும் ஆதரவு
Sri Lankan Tamils
University of Jaffna
Sri Lanka
Eastern Province
By Sumithiran
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மதகுருமார்,சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரை சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர், தென்கையிலை ஆதின குருமுதல்வர் உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
போராட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
தொடர்ச்சியாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.







2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி