காதலர் தினத்தில் படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை(காணொளி)
உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மலர்களுடனும் அன்பின் வெளிப்பாடுகளுடனும் கொண்டாடும் நிலையில், பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் தம்பதியினர் உலகின் மிக நீளமான நீருக்கடியில் முத்தம் கொடுத்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த ஜோடியின் நீருக்கடியில் முத்தத்தின் நீளம் நான்கு நிமிடங்கள் மற்றும் ஆறு வினாடிகள் ஆகும்.
முத்தத்தின் நீளம்

முன்பு, கின்னஸ் உலக சாதனையைப் பெற்ற நீருக்கடியில் முத்தத்தின் நீளம் மூன்று நிமிடங்கள் இருபத்தி நான்கு வினாடிகள்.
மாலைதீவில் உள்ள ரிசார்ட்டில் பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் இந்த உலக சாதனையை படைத்துள்ளனர்.
ஒன்றரை வயதில் பெண் குழந்தை
taking your love underwater for valentine's day ❤️️ pic.twitter.com/jxSYBeoFlV
— Guinness World Records (@GWR) February 14, 2023
பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் தொழில் ரீதியாக டைவிங் பயிற்றுனர்கள்.