குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 30ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டி, இன்று (20.04.2026) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு தோல்விகளைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
மாறுபட்ட உத்வேகம்
இதற்கு மாறாக, மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர்களுடன் களமிறங்குகிறது.

தோல்விகளிலிருந்து வலுவாக மீண்டு வரும் குஜராத் அணியும், தொடர் தோல்விகளுக்குப் பிறகு நிலைத்தன்மையைத் தேடி வரும் மும்பை அணியும் இன்று மாறுபட்ட உத்வேகத்துடன் இந்தப் போட்டியை எதிர்கொள்கின்றன.
இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி நடைபெற்ற 5 போட்டிகளில் 1 போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலும் உள்ளது.
அதன்படி, இன்று நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளுக்கும் ஒரு சவாலான போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |