கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை
புதிய இணைப்பு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் உட்பட இராணுவத்தினர் வரை விரைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











