கிளிநொச்சி துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் கைது ; சிக்கிய ஆதாரங்கள்
Kilinochchi
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Beulah
கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து சூட்டு சம்பவத்துக்கு பாவிக்கப்பட்ட இடியன் துப்பாக்கியும் மோட்டார் சைக்கிளும் கணேசபுரம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினர் அதிரடி
விரைந்து செயல்பட்ட கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சி கணேசபுரம் பகுதி வயல் வெளியில் மறைத்து வைக்கப்பட்ட இடியன் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை இன்று பகல் 1.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


