துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணிப்பிரச்சினை - ஒருவர் படுகாயம்
Crime
Gun Shooting
By pavan
மெதகம - ஊருமுத்தாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(12) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 37 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
காயமடைந்தவரின் பசுவொன்று பிறிதொரு நபரின் காணிக்குள் பிரவேசித்தமைக்காகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்