குரு பெயர்ச்சி : பாதிக்கக்கூடிய ராசிகள் யார்? முழுமையான தகவல் இதோ
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்தவகையில், மிதுன ராசியில் குருவின் பெயர்ச்சி மே 14 புதன்கிழமை இரவு 11:20 மணிக்கு நிகழவுள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
குரு பெயர்ச்சி
அக்டோபர் 18, சனிக்கிழமை இரவு 9:39 மணி வரை குரு மிதுன ராசியில் இருப்பார். இந்தப் பெயர்ச்சியால், குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.
மேஷம் | வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். வருமானம் இருக்கும், செலவுகளும் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு அல்லது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. |
கடகம் | தேவையற்ற செலவுகள் ஏற்படலம். மே 14 முதல் அக்டோபர் 18 வரை வேலையில் தடைகள் ஏற்படலம். குருவின் ஆசிகளைப் பெற குரு ஸ்லோகம் உச்சரிக்கவும். நிதி பற்றாக்குறை ஏற்படும். |
கன்னி | அசுபமான பலனைத் தரும். வியாபாரம் நஷ்டம் ஏற்படலம். பல சவால்கள் வரக் கூடும். வருமானம் பாதிக்கப்படலாம். மன அழுத்தம் ஏற்படலாம். உடல்நலம் மோசமடையும். |
விருச்சிகம் | உடல்நிலை மோசமடையலாம். சில நோய்களால் பாதிக்கப்படலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா மற்றும் தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். வருமானமும் பாதிக்கப்படலாம், செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் பதட்டம் ஏற்படலாம். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். |
மகரம் | எச்சரிக்கையாக இருக்கவும். ரகசிய எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை தவிரக்கவும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் ஏற்படலாம். சகோதரருடன் தகராறு ஏற்படலாம். நோய் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். |
மீனம் | மகிழ்ச்சி குறையும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் காயம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படலாம். மன அமைதி பாதிக்கப்படலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். நிதிப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணம் கடன் வாங்க நேரிடலாம். |
பொறுப்புத் துறப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. IBC TAMIL தளம் இதற்கு பொறுப்பேற்காது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
