2022இன் பலன்கள்.. குருவின் வக்கிர நிலை! அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் விலகி இரட்டிப்பு லாபம் பெறப்போகும் ராசியினர்

Astrology Horoscope People Hindu Hinduism Rasi Palan Guru peyarchi palangal Kuru Peyarchi
By Chanakyan Dec 26, 2021 08:58 AM GMT
Report

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது அனைத்து ராசியினருக்கும் நற்பலன்களை வழங்குவார். குருபகவான் நேர்கதியில் நவம்பர் 13ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பயணம் செய்ய இருக்கும் குரு பகவான் 2022ஆம் ஆண்டு என்ன செய்ய இருக்கிறார்? ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு வருடமும் குரு பெயர்ச்சியை நோக்கி காத்திருப்பது வழக்கம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி லாபகரமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவானால் இரட்டிப்பான லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் இருப்பினும் சுப செலவுகளாக அமைய இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் செலவு செய்யும்படியான சூழ்நிலைகள் உருவாகும்.

தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் வெற்றி அடைவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு என்பதால் திருமண பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். எவ்வளவு தடைகள் வந்தாலும் குரு பார்வையால் அவைகள் விரைவாக நிவர்த்தி ஆகி விடும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குரு வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்க இருக்கிறது. ருண ரோக ஸ்தானத்தில் இருப்பதால் கடன் பிரச்சினைகள் அகலும். கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்ப வந்து சேரும். இதுவரை உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் அக்கறையும் விழிப்புணர்வும் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். வியாழன் கிழமையில் குரு அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறுசிறு பிரச்சினைகளை அவ்வப்போது கொடுத்து வந்தாலும் குரு நேர்கதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது நல்ல பலன்களைக் கொடுப்பார். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கிவிடும். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளின் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை கொடுக்க இருக்கிறார்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றும் என்னும் பழமொழிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்வது நல்லது. பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத நேரத்தில் திடீர் பணவரவு உண்டாகும். வியாழன் கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் காரிய தடைகளை ஏற்படுத்துவார். எந்த ஒரு விஷயத்திலும் யோசிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. ஒன்றுக்கு இரண்டு முறை இது சரியா என்பதை சிந்தித்து செயல்படுவது உத்தமம். குரு பெயர்ச்சிக்கும் முன்னரே திருமண சுபகாரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது நல்லது.

ஆரோக்கிய ரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிறத்தை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்க இருக்கிறார். குரு நேர்கதியில் செய்யும்பொழுது மாற்றங்களை உண்டு பண்ணுவார். நீங்கள் எதிர்பாராத சில விசயங்களை எதிர்பார்ப்பது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இலாபத்தில் குறைவிருக்காது. புதிய பணியாட்களை நியமனம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்க திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். எதற்காக இதுவரை போராடிக் கொண்டிருக்கிறீர்களோ, அதில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பான திட்டமிடல் மேற்கொள்வது நன்மைகளை கொடுக்கும். உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய அமைப்பு என்பதால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களை தான் கொடுத்து இருக்கிறது. குரு இடம்பெயரும் காலங்களில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற மருத்துவ ரீதியான செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் கவனம் தேவை.

தொழில் மற்றும் வியாபார ரீதியான விசயங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தூக்கமின்மை பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும் என்பதால் கூடுமானவரை மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலக ரீதியான பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளும் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குரு பகவான் வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மறையும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் கை கூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களுடைய தொல்லைகள் நீங்கும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முதலீடுகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகமுண்டு. செலவுக்கு ஏற்ப வரவுகளும் வந்து கொண்டே இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். அர்த்தாஷ்டம சனி பாதிப்புகள் குறையும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குரு வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது மனதில் இருக்கும் குழப்பங்களை சரி செய்துவிடுவார். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்ந்து அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான விசயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் பெருகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். குடும்பத்தில் நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைய போகிறது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான நெருக்கடி ஏற்படும் என்பதால்ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய பணம் கைக்கு வர கால தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைத்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பாத சனி உங்களை பாடாய் படுத்தினாலும் சில சமயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாழன் தோறும் குரு வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை கொடுக்கப் போகிறது. வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். இதுவரை உங்களை பாடாய்படுத்தி வந்திருந்த வருமானப் பற்றாக்குறை தீர்வதற்கு உரிய பலன்களை கொடுப்பார்.

உங்கள் முழு ஆற்றலையும் கொடுத்து உழைத்தால் உழைப்பிற்கு உரிய லாபம் காணலாம். எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் காண கூடிய வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் நற்பலன் தரும் வகையில் அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். வெளிநாடு தொடர்பான வேலை விசயத்தில் சாதகப்பலன் உண்டாகும். வியாழன் கிழமையில் கோதுமை தானம் செய்து வர நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போவதால் நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெரிய தொகை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம்.

தொழிலில் சுயமாக முடிவெடுப்பது அனுகூலமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தேவையற்ற வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். அடிக்கடி மஞ்சள் நிற உடையை உடுத்துவது நல்லது.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி லாபம் நஷ்டம் இரண்டையுமே சரி சமமாக கொடுக்கக்கூடிய பலன்களை கொடுக்க இருக்கிறார். வரவுக்கு உரிய செலவும், செலவுக்கு உரிய வரவும் இருக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் தீர்ந்து உடல் வலுப்பெறும். உங்கள் தோற்றப்பொலிவு இன்னும் ஜொலித்திடும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் அற்புத வாய்ப்பாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டியது தான். சோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் தேவை. அலுவலகத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் உயர்வடைய வாய்ப்புகள் உண்டு. வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள்.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025