இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணித் தலைவரின் சீற்றம்!

Sonnalum Kuttram
By Kajinthan Jun 17, 2026 09:10 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டி யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கான வலுவான காரணங்களையும் நிர்வாக தெரிவுக் கூட்டத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களையும் சுட்டிக்காட்டி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள்

1.

21.10.2025 அன்று காங்கேசன் துறைத் தொகுதிக்கான நிர்வாக தெரிவு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு தெரியாமல் ஏற்கனவே இயங்கு நிலையில் இருக்கும் தொகுதி நிர்வாகத்திற்கு தெரியாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினரை அழைத்து புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றது யாப்பு விதி முறைகளுக்கு முரணானது , இது தொடர்பாக தொகுதிகிளை நிர்வாகிகள் கட்சியில் முறையிட்டுள்ளனர்.

2.

23.04.2026 அன்று வட்டுக்கோட்டைத் தொகுதியில் இடம்பெற்ற வெற்றிடம் நிரப்புதல் எனும் பெயரில் புதிதாக நிர்வாக தெரிவுக்கு மாவட்ட தலைவர் செயலாளருக்கு தெரியாது கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களை தொலைபேசி மூலம் அழைத்தும் பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டும் , காரைநகர் பிரதேசத்தையும் இணைத்து தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது யாப்பு விதிகளுக்கு முரணானது, இது தொடர்பாக ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையிலும் தொகுதியின் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு முறையிட்டுள்ளனர்.

3.

31.05.2026 அன்று யாழ்மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இன்றி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தலைமை தாங்கி கூட்டம் நடைபெற்ற வேளை புதிய நிர்வாக தெரிவு தொடர்பாக தெரிவு செய்ய முன் உறுப்பினராகள் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கேட்டபோதும் சந்தர்ப்பம் தரவில்லை.

ஐனநாயக கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களை கேளாது அராஜகமான முறையில் ஐனநாயக விரோதமான முறையில் கூட்டத்தில் தலைமை தாங்கிய நடாத்திய பதில் செயலாளர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிதாற்போல் அமைந்தது.

தலைமை table இருந்து தெரிவு செய்தால் மறு தெரிவு இருக்க கூடாது என மிரட்டி கூட்டத்தை தலைமைதாங்கிய பதில் பொது செயலாளரால் எச்சரிக்கையாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் முற்றிலுமாக யாப்பு விதிமுறைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான செயலாகும்.

4.

கடந்த தலைவர் தேர்வில் தொகுதி என்பதை பிரதேச ரீதியானது என கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுசபைக்கு 5 பேர் படி 10 பேர் தெரிவு செய்து தலைவர் தேர்வு நடைபெற்றது.

இந்த நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக நீதி மன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறையை , இப்போது தொகுதி என ஒன்றாக இணைத்து தெரிவு செய்யப்பட்டது எந்த முறையிலானது, யாருடைய தீர்மானம்?

என்ற விடயங்களை சுட்டிக்காட்டப்பட்டு, கூட்டத்தில் இடம் பெற்ற விடயங்களையும் சுட்டிக்காட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபனால் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

GalleryGallery

குடிநீரின்றி தவிக்கும் குச்சவெளி பல்லவன்குளம் மக்கள்

குடிநீரின்றி தவிக்கும் குச்சவெளி பல்லவன்குளம் மக்கள்

பிரதேச சபையின் ஊழியர்களை வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

பிரதேச சபையின் ஊழியர்களை வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017