கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை! ஹரிணி அமரசூரிய
கல்வி அமைச்சின் முன்பாக கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை என பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய( Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(03) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, “கல்வி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் ஒரு மாதத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கல்வி பிரதி அமைச்சருடனும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் என்று உத்தரவாதமளித்தோம். இதற்கமைவாகவே அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன்.
கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை. அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தவே பொலிஸார் தலையிட்டுள்ளனர்.
பிரச்சினைகளுக்கான தீர்வு
முறையான திட்டமிடல் இல்லாமல் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சினைக்கு முகங் கொடுத்துள்ளார்கள்.
அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக கடந்த 2ஆம் திகதி போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது, போராட்டத்தை கலைக்க முற்பட்ட காவல்துறையினரில் ஒரு உப காவல்துறை பரிசோதகர், 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் என மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |