வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது ஊடுருவல்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology ) உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மீண்டும் இன்று (04.12.2024) ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணையதளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் இணையதளம் ஊடுருவல் செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
அதிகாரபூர்வ இணையதளம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இந்த அதிகாரபூர்வ இணையதளம், நவம்பர் முதலாம் திகதியன்றும் ஊடுருவல் செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2000 இணைய அச்சுறுத்தல் மற்றும் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் முறைபாடு பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT)தெரிவித்துள்ளது.
அதன்படி, சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        