உச்சந்தலையில் முடி உதிர்வா..! இதை செய்தால் போதும் உடனடி பலன்
முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும்.
தினசரி தலை சீவும் பொழுது முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சில நேரங்களில் எக்கச்சக்கமாக முடி கொட்டி, பெண்களுக்கு அடர்த்தி குறைந்து, மெலிந்து போதல் மற்றும் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதல் போன்ற தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் அதிகப்படியான முடி கொட்டுவதற்கு உடல்நலக் கோளாறுகள் அல்லது குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். அதிகப்படியான முடி கொட்டுவதுதோடு தொடர்புடைய உடல்நலக் கோளாறுகளின் பட்டியல் இங்கே.
தைராய்டு குறைபாடுகள்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக உங்களுக்கு அதிகமாக முடி கொட்டலாம். முடி உதிராமல் இருக்கவும், முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாக வளரவும் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக தைராய்டு கிளாண்ட் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கிரகிக்க உதவுகிறது.
இந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. நீங்கள் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு கடுமையான முடி இழப்பு ஏற்படலாம்.
அலோபேசியா
அலோபேசியா என்பது ஒரு இம்யூன் குறைபாடு. அதாவது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்படும் பொழுது பலவித குறைபாடுகள் தோன்றும்.
அலோபேசியா என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் தீவிரமான முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்படும் நிலையைக் குறிக்கிறது.
கொத்துக் கொத்தாக முடி கொட்டுதல், குறிப்பிட்ட இடங்களில் திட்டு திட்டாக வழுக்கை விழுதல், அல்லது முழுவதுமாக வழுக்கை தோன்றுதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்
சமீபகாலமாக, பலருக்கும் அதிகமாக முடி கொட்டுதல் என்பது மன அழுத்தத்தோடு தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மூன்று வகை பாதிப்புகள் உள்ளன. டெலோஜென் எஃப்லுவியும் (Telogen effluvium) என்பது தீவரமான மன அழுத்தத்தால், முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி, முடி உதிர்வை உண்டாக்கும் நிலையைக் குறிக்கிறது.
பலர் அவ்வபோது கைகளால் தலை முடியை கலைத்துவிட்டுக் கொண்டும், பென்சில், பேனா அல்லது விரல்களால் முடியை சுழற்றி விடும் பழக்கமும் உள்ளன. ஒரு சிலர், மன அழுத்தம் காரணமாக முடிகளை தலையில் இருந்து பிடுங்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இதனால் ஏற்படும் முடி உத்திரவுக்கு டிரிகோடில்லோமேனியா (Trichotillomania) என்று பெயர். மூன்றாவதாக, ஏற்கனவே கூறியுள்ளது போல, அலோபேசியா. நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சரியாக செயல்பட ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு இன்றியமையாததோ அதே போல முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை.
உங்கள் உணவில் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய தேவையான இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல், முடி வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படும்.
இரும்பு சத்து குறைபாடு இருந்தால் கூந்தலின் வேர்களுக்கு இரத்த ஓட்டமும், ஒக்சிஜனும் தடைபடும். வேர்கள் வலுவிழந்து கூந்தல் உதிரத் தொடங்கும்.
செல்கள் மட்டும் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக வேலை செய்வதற்கு ஜின்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப்போல முடிக்கற்றைகள் அடர்த்தியாக வளர்வதற்கு ப்ரோட்டின் அவசியம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
