முடி கொட்டுவது இலகுவாக நின்றுவிடும் - இதை மட்டும் செய்யுங்கள்!
Skin Care
By Dharu
தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை முடி உதிர்வு மற்றும் முடி கொட்டும் பிரச்சினைகளே.
குறித்த பிரச்சினை தற்போது அதிகமானவர்களை பாதித்துள்ளது.
உண்மையில் நாம் வழமையாக சில விடயங்களை கடைபிடித்தாலே முடி கொட்டுவது இலகுவாக நின்றுவிடும்.
பிரச்சினையிலிருந்து விடுபட
அவ்வாறான விடயங்கள் என்னவென்று பார்ப்போம்.
- மாதுளை ஜூஸ், உலர் அத்திப்பழம், உலர் திராட்சை என்பவற்றை சாப்பிடலாம்.
- குளிக்கும்போது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
- உண்ணும் உணவில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்.
- பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.
- கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றில் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
- பொடுகுத் தொல்லையை சரி செய்ய பொடுதலை எனும் மூலிகையை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி வாரம் இரண்டு தடவை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
முடியுமானவைரை இவற்றையெல்லாம் கடைபிடித்தால் முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி