நெற்றி பகுதியில் முடி உதிர்வா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை முடி உதிர்வு மற்றும் முடி கொட்டும் பிரச்சினைகளே
அதுவும் குறிப்பாக பெண்களின் நெற்றி பகுதியில் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது.
குறித்த பிரச்சினை தற்போது அதிகமானவர்களை பாதித்துள்ளது.
உண்மையில் நாம் வழமையாக சில விடயங்களை கடைபிடித்தாலே முடி கொட்டுவது இலகுவாக நின்றுவிடும். தற்போது அவற்றை பார்ப்போம்.
வெங்காய மசாஜ்
வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது.
எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
எலுமிச்சை சாறு
மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது.
மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி

முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.
மருதாணி பொடியும் பீட்ருட்டும்
சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு அரைத்த சாறுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் பூசவும்.பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.
எண்ணை + லவங்க பட்டை
நெற்றியில் முடி வளர எண்ணையுடன் சிறிதளவு லவங்க பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
