குடும்பமொன்றுக்கு ஒரு நாளைக்கு அரைபாதி தேங்காய் போதுமாம்
srilanka
people
coconut
By Sumithiran
சரியான முறையில் தேங்காயை பயன்படுத்தினால் குடும்பமொன்றுக்கு நாளொன்றுக்கு அரைபாதி தேங்காய் மட்டுமே போதுமானது என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு தேங்காய் நுகர்வில் 30% வீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் வருடாந்தம் விளையும் தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கையால் பிழிந்தால் 20-30% தேங்காய்ப்பால் கிடைத்தாலும், 50% தேங்காய்ப்பால் கிறைண்டரில் அரைத்தால் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்