இஸ்ரேலுடன் முடிவுக்கு வரும் போர் நிறுத்தம் : ஹமாஸ் அமைப்பின் அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) – ஹமாஸ் (Hamas) அமைப்பின் முதல் கட்டப் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீடிப்பது தொடா்பான பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறு வாரகால முதல் கட்ட போர்நிறுத்தம் நாளை (01.03.2025) முடிவுக்கு வருகிறது.
அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது, காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று ஹமாஸ் அமைப்பினா் தற்போது அறிவித்துள்ளனா்.
ஹமாஸ் அமைப்பு
ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஸாவில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்.
அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும், அந்த ஒப்பந்தத்தை மீறாமல் செயல்படுவதும் மட்டுமே எஞ்சியுள்ள இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான வழியாகும்.
பணயக் கைதிகள்
போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கினால் அது பணயக் கைதிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, கைதிகள் பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில், ஒரே இரவில் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை, ஹமாஸ் நேற்றைய தினம் (27.02.2025) ஒப்படைத்துள்ளது.
2025, ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம், ஏராளமான பின்னடைவுகள் இருந்தபோதிலும் பெரும்பாலும் பணயக்கைதி பரிமாற்றம் எந்த சிறப்பான முறையில் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
