ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்
புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஹமாஸ் (hamas)அமைப்பு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவுக்கு வரலாம் என்றும் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான்( Osama Hamdan) தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 17, 2024 அன்று காசா பகுதியில் இஸ்ரேல்(israel) நடத்திய வான் வழி தாக்குதலில் ஹமாஸ் அதன் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார்(Yahya Sinwar) இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
எதிர்ப்பின் பாதையைத் தொடரும்
அவரது தகவலின்படி, ஹமாஸ் அமைப்பு தனது எதிர்ப்பின் பாதையைத் தொடரும் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், இந்த விருப்பத்தை எதுவும் நசுக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவேண்டும்
காசாவில் இஸ்ரேல் ஆட்சியின் தொடர் அட்டூழியங்களை குறிப்பிட்டு, பாலஸ்தீனிய தேசத்தை அனைத்தையும் பறித்துவிட்டது என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, போர்நிறுத்த பேச்சுவார்த்தையில்,முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் பின்வாங்க வேண்டியதன் அவசியத்தை ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
தற்போது அந்த அமைப்பு தலைவர் இல்லாமலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |