ஹமாஸின் லெபனான் பிரிவு தலைவரை வீழ்த்தியது இஸ்ரேல்
இஸ்ரேல்(israel) நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் லெபனான்(lebanopn) பிரிவு தலைவர் கொல்லப்பட்டார். இன்று (17) திங்கட்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனானின் சிடோன் நகரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் லெபனான் பிரிவு தலைவர்
இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவர் Mohammad Shahin என்பவர் கொல்லப்பட்டார்.
BREAKING: Mohammad Shahin, a senior official in Hamas's military wing in Lebanon, was killed in a targeted Israeli airstrike in Sidon, southern Lebanon. pic.twitter.com/i7bHGIYSE6
— Quds News Network (@QudsNen) February 17, 2025
இதேவேளை மூன்று வாரங்களுக்கு முன்பு பின்வாங்கிய பின்னர், இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனான் நகரமான கஃபர் ஷுபாவிற்குள் மீண்டும் நுழைந்தன.
லெபனான் பாதுகாப்பு வட்டாரத்தின்படி, இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் ஒரு புல்டோசர் நகரம் மற்றும் அதன் மேற்கு சுற்றுப்புறங்களுக்குள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு இஸ்ரேலிய ஆளில்லா விமானம் கஃபர் ஷுபா பள்ளிக்கு அருகிலும் தாக்கியது, இது ஏற்கனவே முந்தைய தாக்குதலில் சேதமடைந்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்