ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு : பாதுகாப்பு பிரிவு தலைவரை சாய்த்தது இஸ்ரேல்
தெற்கு காசாவில்(gaza) உள்ள ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் என்று அடையாளம் காணப்பட்ட ஹுஸாம் ஷாவானை, ஆளில்லா விமானத் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய(israel) இராணுவம் வியாழனன்று அறிவித்தது.
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்குமிடமான கான் யூனிஸில் உள்ள மனிதாபிமான வலயத்தில் ஷாவான் இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில்,
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
“தெற்கு காஸாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் தலைவர், தீவிரவாதியான ஹசம் ஷாவான், கான் யூனிஸில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.
🔴The Head of Hamas Internal Security Forces in southern Gaza, the terrorist Hassam Shahwan, was eliminated by the IAF in an intelligence-based strike in the Humanitarian Area in Khan Yunis.
— Israel Defense Forces (@IDF) January 2, 2025
Shahwan was responsible for developing intelligence assessments in coordination with… pic.twitter.com/5sr6Dt9XR5
காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைத் தாக்குதல்களில் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் ஷாவான் இணைந்து செயல்பட்டு வந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவிற்குள் ஈரானின் நிலத்தடி ஏவுகணை தொழிற்சாலையை அழித்த இஸ்ரேல் படை: வெளிவந்துள்ள மயிர்கூச்செறியும் காட்சிகள்
இந்த வார தொடக்கத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸ் படைப்பிரிவின் தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டார். 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு சபா தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |