மேலும் ஆறு பணய கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ்

World Israel-Hamas War Gaza
By Shalini Balachandran Feb 18, 2025 07:58 PM GMT
Report

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய (Israel) பணய கைதிகளில் மேலும் ஆறு பேரை ஹமாஸ் (Hamas) வடுதலை செய்யவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. 

தொடர்ந்து ஏமாறுபவர்களின் பெயர் ஆரம்பிக்கும் 3 எழுத்துக்கள் : எது தெரியுமா !

தொடர்ந்து ஏமாறுபவர்களின் பெயர் ஆரம்பிக்கும் 3 எழுத்துக்கள் : எது தெரியுமா !

தற்காலிக போர்

பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக ஆறு வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது.

மேலும் ஆறு பணய கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் | Hamas To Release 6 Israeli Hostages

33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில், ஆறு வார போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 1,099 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது..

சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றிய சீனா : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றிய சீனா : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இஸ்ரேலிய பிணைக்கைதிகள்

காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு வரும் சனிக்கிழமை விடுதலை செய்யவுள்ளது.

மேலும் ஆறு பணய கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் | Hamas To Release 6 Israeli Hostages

அத்தோடு, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களையும் ஹமாஸ் ஆயுதக்குழு வரும் வியாழக்கிழமை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.

இதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்கின்றது.

மேலும், காசாவுக்குள் தற்காலிக தங்கும் குடியிருப்புகள் மற்றும் கனரக வானங்களையும் அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை விடுத்த டெஸ்லா

தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை விடுத்த டெஸ்லா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016